Header Ads

  • BREAKING



    சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு.

    சென்னை: 'முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது' என, அப்பல்லோ மருத்துவமனை அறிவித்த பிறகு, சென்னையில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து சென்னை கமிஷனர் ஜார்ஜ் சரமாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.அவரது உத்தரவு வருமாறு:*காவல் நிலையங்களில் குறைந்த எண்ணிக்கையில் போலீசார் இருந்தால் போதும், தேவையின்றி போலீசார் யாரும் காவல் நிலையத்தில் அமர கூடாது.* மக்கள் பார்வையில் இருக்கும்படி போலீசார் நடமாட்டம் இருக்க வேண்டும்.*போலீசாருக்கு விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை.*ஐ.எஸ்., எனப்படும் நுண்ணறிவு பிரிவு போலீசாரும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.*பிரச்னைக்குரிய இடங்கள் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், நிரந்தர எண்ணிக்கையில் போலீசார் இருக்க வேண்டும்.*சிக்னல் தோறும் போலீஸ் பாதுகாப்பு இருக்க வேண்டும்.*ரோந்து பணியில் தொய்வு இருக்க கூடாது.

    24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் இருக்க வேண்டும்.*உயர் போலீஸ் அதிகாரி தலைமையில் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad