Header Ads

  • BREAKING



    முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு வித்யாசாகர் ராவ், எஸ்.கே. கௌல் அஞ்சலி.

    சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கௌல் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார்.

    இதையடுத்து, அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 10.30 மணியளவில் ராஜாஜி அரங்கத்துக்கு வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெயலலிதா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கௌல், ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    இதற்கிடையே, ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வருகை தர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad