Header Ads

  • BREAKING



    ஆண்டுக்கொரு முறை பூக்கும் மார்கழிப் பூ!

    கொடைக்கானலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பூக்கும் மார்கழிப்பூவானது தற்போது பூக்கத்தொடங்கி உள்ளது. அங்குள்ள பிரயண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் பூக்களை சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மார்கழிப்பூ பிரயன்ட் பூங்காவில், கண்ணாடி மாளிகை அருகே பூத்து குலுங்கியுள்ளது. இந்த பூவானது மரத்தில் பூக்கக்கூடிய அரியவகை பூவாகும். ஆண்டு முழுவதும் இலைகளை மட்டும் கொண்டிருக்கும் இந்த மரமானது, டிசம்பர் துவங்கியவுடன், மலர் மொட்டுக்களை உருவாக்க துவக்கி, மரத்தின் அனைத்து இலைகளையும் உதிர்ந்து, அனைத்து மொட்டுக்களும் ஒரே நேரத்தில் மலர்ந்து, மரம் முழுவதும் ரோஸ் நிறமாக மாறி காண்பவர் கண்ணை கவரும் வண்ணத்தில் காட்சியளிக்கும். தற்பொழுது பூங்காவில் வேறு மலர்கள் பூத்து குலுங்காத நிலையில். மார்கழிப்பூ மட்டும் மரம் முழுவதும் பூத்து குலுங்கியுள்ள காரணத்தினால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad