Header Ads

 • BREAKING  NewsTen இரவு செய்திகள் 13/12/2016

  *🔴இரவு செய்திகள்@13/12/16🔴*

  🔴நேற்று இரவு நிலவரப்படி புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக இருந்தது. தற்போது அது 18-ஆக உயர்ந்துள்ளது என பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.27 பெண்கள் உள்பட 172 பேர் காயமடைந்துள்ளனர்.

  🔴வார்தா' புயல் பாதிப்பு: தமிழக நிலவரத்தை முதல்வரிடம் கேட்டறிந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

  🔴எரிபொருள் கொண்டு வரும் டேங்கர் லாரிகளால் சென்னைக்குள் வர முடியவில்லை.சாலைகளில் மரங்கள் முறிந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இப்போதுதான் முக்கிய வழித்தடங்களில் இடையூறுகள் அகற்றப்பட்டுள்ளன.எனவே நாளை முதல் நகரில் பெட்ரோல், டீசல் வழக்கம் போல் கிடைக்கும்.

  🔴கூடுவாஞ்சேரி - வண்டலூர் இடையே சேதமடைந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படுகின்றன.

  🔴புயலால் சாலைகளில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து சரிந்து கிடந்தன.இன்று நகரின் முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டன.அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜாஜி சாலை, ஆர்.கே. சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

  🔴இதுவரை 1,947 மரங்கள் அகற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  🔴வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்பையடுத்து, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியான பழவேற்காடு பகுதியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். 

  🔴வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பைக்கில் சென்று பார்வையிட்டார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

  🔴வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 10 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

  🔴வர்தா புயலால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்தது. இருப்பினும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.

  🔴சென்னையில், 'வர்தா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிப்பதற்காக, கடற்படையை சேர்ந்த, இரண்டு கப்பல்களில் நிவாரண பொருட்கள் சென்னை துறைமுகம் கொண்டு வரப்பட்டன.

  🔴நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு

  🔴சென்னையில் வர்தா புயல் ஆடிய ருத்ரதாண்டவத்தால் தொலைத்தொடர்பு சாதனங்களில் சிக்னல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் செல்போன்களில் சிக்னல் சுத்தமாக இல்லை

  🔴புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறேன் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

  🔴வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், கேரள முதல்வர் பினரயி விஜயனும் தெரிவித்துள்ளனர்.

  🔴கேரள மாநிலத்தில் நடந்து வரும் உலகப்பட விழாவில் திரைப்படம் போடுவதற்கு முன்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அப்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த 6 பேர் மறுத்துள்ளனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

  🔴நாடு முழுவதும் ஜன்தன் கணக்குகளில் அதிக பணம் டெபாசிட் செய்யப்பட்ட மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. இங்கு இந்த வங்கி கணக்குகளில் ரூ.12 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கம் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. 

  🔴மூத்த பத்திரிகையாளரான இந்து என் ராம் இன்று திடீரென சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்து பேசினார். அதிமுகவை சசிகலா கைப்பற்ற நினைத்தால் பேரழிவுதான் ஏற்படும் என கடுமையாக விமர்சித்த இந்து ராம் திடீரென போயஸ் கார்டனுக்கு விசிட் அடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  🔴இன்னும் 3 வாரத்தில் ஏடிஎம்களில் போதிய ரூபாய் நோட்டுகள் நிரப்பப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

  🔴500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவித்து ஏழைகள் மீது பிரதமர் நரேந்திர மோடி போர் தொடுத்துள்ளார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

  🔴சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஜனவரி 1 முதல் மின்னணு பரிமாற்றத்தின் மூலம் மாணவர்களிடம் இருந்து கல்வி கட்டணத்தை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

  🔴பண மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் முண்ட்ரா தெரிவித்தார்.

  🔴500,1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்த பிறகு வங்கிகளில் ரூ.12.44 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஆர்.காந்தி தெரிவித்தார்

  🔴சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக விடுதியில் வேளாண் கல்லூரி முதலாமாண்டு மாணவி தூக்கிட்டு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  🔴அதிமுகவுக்கு தலைமை பொறுப்பேற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சசிகலாவிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  🔴மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தஞ்சாவூரில் அதிமுக நிர்வாகி சாமிநாதன் என்பவர் கோயில் கட்டியுள்ளார். இந்த கோயிலில் ஜெயலலிதா, அண்ணா, எம்ஜிஆர் படங்களும் வைக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இரண்டடியில் ஜெயலலிதாவின் வெங்கல சிலை வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  🔴கிரானைட்மோசடி தொடர்பான வழக்கில் பி.ஆர்.பி., நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்

  🔴அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் அணை கட்டும் திட்டத்தில் தவறு செய்யவில்லை எனவும், தவறான தகவல் பரப்பியவர்களை ஷூவால் அடிக்க வேண்டும் என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறியுள்ளார்.

  🔴திருமலையில் தங்க டாலர்களின் விலை சற்று குறைந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான், பத்மாவதி தாயார் உருவம் பொறித்த 10 கிராம், 5 கிராம், 2 கிராம் தங்கம், வெள்ளி மற்றும் செப்பு டாலர்களை விற்று வருகிறது. இந்நிலையில் தங்கம், வெள்ளியின் சந்தை விலை குறைந்ததை அடுத்து டாலர்களின் விலை குறைந்துள்ளது.

  🔴செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியதாக ரிசர்வ் வங்கியின் மூத்த சிறப்பு உதவியாளர் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

  🔴மத்திய பிரதேசம் மாநிலம் ராஜ்கர் பகுதியில் ஆட்டோ மீது பேருந்து மோதி 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர். மேலும் விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

  🔴விமான டிக்கெட்டுகளை ஈ.எம்.ஐ எனப்படும் தவணை திட்டத்தின் கீழ் வழங்க ஜெட் ஏர்வேஸ் முன் வந்துள்ளது.ஆக்சிஸ், ஹெச்.எஸ்.பி.சி, ஐசிஐசிஐ, இன்டஸ்இன்ட், கோடக் மகிந்திரா மற்றும் ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கி ஆகிய 6 வங்கிகளில் ஏதாவது ஒன்றின் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் தவணை திட்டத்தில் டிக்கெட் வாங்க தகுதியானவர்கள்

  🔴ஜப்பானின் டக்கெரு கொபயாஷி 3 நிமிடங்களில் 12 ஹாம் பர்கர்கள் சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அவரின் முந்தைய சாதனையான 3 நிமிடங்களில் 11 பர்கர் சாப்பிட்டதை அவரே முறியடித்துள்ளார். இது மட்டுமின்றி, 3 நிமிடங்களில் 6 ஹாட்டாக்ஸ் சாப்பிட்டும், ஒரு நிமிடத்தில் 29 மீட்-பால் சாப்பிட்டும் இவர் சாதனை இவர் நிகழ்த்தியுள்ளார். 

  🔴சிரியாவில் போராளிகள் வசம் சிக்கியுள்ள அலெப்போ மற்றும் இட்லிப் மாகாணங்களை மீட்க ரஷ்ய விமானப்படையின் உதவியுடன் அரசுப் படைகள் ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றன. அரசுப்படைகள் அலெப்போ நகரை மீட்பதற்காக நடத்திய தாக்குதலில் 60-க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

  கருத்துகள் இல்லை

  Post Bottom Ad