NewsTEN இரவு செய்திகள் : 02 12 2016
திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும் வீடு திரும்பது பற்றி மருத்துவர்களே முடிவு செய்வார்கள் - முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
ஜல்லிக்கட்டு வழக்கில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன்சுவாமி வாதாட இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா புதிய சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சிபிஐ இயக்குனர் அணில் சின்ஹாவின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையொட்டி புதிய இயக்குனரை மத்திய அரசு நியமித்துள்ளது.
தமிழக ஸ்கேன் சென்டர்களில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது மேலும் 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கைதர தமிஸ்க் அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த பிரதமரிடம் வலியுறுத்துமாறு ஆளுநரிடம் கூறினேன் : வைகோ தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் சந்தித்த பிறகு வைகோ பேட்டி.
திருச்சி மாவட்டம் துறையூர் தோட்டா ஆலை வெடி விபத்து வழக்கு சிபிசிஐடி மாற்றம் - டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த நாடா புயல் காரைக்கால் அருகே கரையை கடந்தது. மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாகை மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 93 பேர் இன்னும் கரை திரும்பவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கிச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை , கோடியக்கரையைச் சேர்ந்த மீனவர்கள் 25ம் தேதி கடலுக்குச் சென்றனர்.
டிச- 4 இல் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு : இந்திய வானிலை மையம்.
உச்சநீதிமன்றம் , உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட கீழ் நீதிமன்றங்களில் விசாரணை தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்க கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் மனு.
சென்னையில் இருந்து சிறப்பு மருத்துவ குழு இணை இயக்குனர் குருநாதன் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஸ்கேன் சென்டர்கள் சோதனையில் 3 ஸ்கேன் சென்டர்கள் ஆய்வு.
சேலம் உருக்காலை பங்குகளை விற்க கூடாது என அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் மாநிலங்களவையில் வலியுறுத்தல்.
சேலம் உருக்காலை பங்குகளை விற்பனை செய்ய மாநிலங்களவையில் திமுக எம்பி திருச்சி சிவா கடும் எதிர்ப்பு.
நாடாளுமன்ற பாதுகாப்பை நேரலை செய்த விவகாரம். ஆம் ஆத்மி எம்பி பக்வந்த் அவையில் ஒரு வாரம் பங்கேற்க கூடாது என அறிவுறுத்தல்.
கோடியக்கரையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 75 மீனவர்களை மீட்க இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்.
பாளையங்கோட்டை சிறையில் உள்ள ஆயுள் தண்டணை கைதி தற்கொலை முயற்சி.
கடந்த 29ம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர் நாகை மீனவர்கள்
நேற்று புயலால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர் இன்று அவர்கள் பாதுகாப்பால கரையேறினர்.
திருச்சி தோட்டா ஆலை வெடி விபத்து பலி எண்ணிக்கை உயர்வு விபத்து : 19 பேர் பலி.
சென்னையில் ஒரே நாளில் 3 மேம்பாலங்கள் திறப்பு : வடபழனி , அண்ணாநகரில் புதிய மேம்பாலங்கள் திறக்கப்பட்டன புயல் , மழை எச்சரிக்கையால் முன்னறிவிப்பின்றி இப்பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.
மக்களவை , மாநிலங்களவை பாஜக உறுப்பினர்கள் அனைவரும் அடுத்தவாரம் முழுவதும் தவறாமல் அவையில் கலந்துகொள்ள உத்தரவு.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறிய 112 ஸ்கேன் செண்டர்கள் மீது நடவடிக்கை : சுகாதாரத் துறை செயலர்.
அமெரிக்காவில் டென்னஸி மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ பயங்கரமாகப் பரவி வருகிறது இதில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ATM இயந்திரத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கின்றன.500 ரூபாய் நோட்டுகளை இயந்திரத்தில் பொருத்த முடியவில்லை.எனவே ATM இயந்திரங்களை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.இப்பணிகள் இன்னும் 1 வாரத்தில் முடிவடையும்.பிறகு ATMல் 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும்.
ஈரோட்டில் லஞ்சம் பெற்றதாக மாநகராட்சி ஊழியர் கைது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரில் 5 கோடி மதிப்பிலான தங்ககட்டிகள் நகைகள் பறிமுதல்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா அவர் பூரண நலம்பெற வேண்டி தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சர்வமதப் பிரார்த்தனை ஒன்றை நடத்தியது.
சீனாவில் ஹூபே மாகாணத்தின் மியொலிங் நகரில் விபத்து 20 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து திடீரென ஏரிக்குள் கவிழ்ந்தது 17 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கருத்துகள் இல்லை