Header Ads

  • BREAKING



    O.B.C பட்டியலில் புதிதாக 15 ஜாதிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

    மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சமூகப் பட்டியலில் புதிதாக 15 ஜாதிகளைச் சேர்ப்பற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
    அஸ்ஸாம், பிகார், ஹிமாசலப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள 15 ஜாதிகளை ஓபிசி பட்டியலில் சேர்க்கவும், 13 திருத்தங்களை மேற்கொள்ளவும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது. 
    அதன்படி, 15 ஜாதிகள், புதிதாக ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் இப்பட்டியலில் உள்ள 9 ஜாதிகளில் உபஜாதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 4 ஜாதிகளின் பெயர்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 
    ஓபிசி பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள 15 ஜாதிகளைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் அந்த ஜாதியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுச் சலுகைகளை இனி பெறலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad