Header Ads

  • BREAKING



    பயண நேரம் 2 வாரம்... தூரம் 12 ஆயிரம் கி.மீ.... சீனாவின் சரக்கு ரயில் சேவை.

    சீனா மற்றும் லண்டன் இடையேலான சரக்கு ரயில் சேவை போக்குவரத்தை சீனா தொடங்கியுள்ளது.

    உலகின் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் சீனா, பல்வேறு நாடுகளுடன் வியாபாரத்தை பெருக்கி கொள்ளும் நோக்கில் சீனா - லண்டன் இடையே ரயில் போக்குவரத்தை தொடங்கியுள்ளது.

    சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தில் உள்ள யீ வூ நகரிலிருந்து புறப்படும் அந்த சரக்கு ரயில், துணிகள், சூட்கேஸ், பைகள் மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்களை கொண்டு செல்லும். 12 ஆயிரம் கி.மீ தூரத்தை இரண்டு வாரங்களில் இந்த ரயில் சென்றடையும்.

    சீனாவில் தொடங்கப்பட்ட இந்த சரக்கு ரயில் சேவையானது கஜகஸ்தான், ரஷ்யா, பெலாராஸ், போலந்து, ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் வழியாக லண்டன் நகரை சென்றடையும் என கூறப்படுகிறது.

    வியாபார நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ரயில் சேவையின் மூலம் பயண நேரம் குறைவதோடு, ஏற்றுமதியாளர்களுக்கு சரக்கு கப்பல் சேவை வரியும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad