Header Ads

  • BREAKING



    200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்: ரஷிய உதவியுடன் இயக்கத் திட்டம்.

    ரஷிய நாட்டு உதவியுடன் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

    இது தொடர்பாக முதல் கட்ட ஆய்வு அறிக்கை கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் திட்டமாக நாகபுரியில் இருந்து செகந்தராபாத் வரையிலான 575 கி.மீ. தொலைவுக்கு இந்த 200 கி.மீ. வேக ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவில் இப்போது தயாரிக்கப்பட்டு வரும் ரயில் பெட்டிகளும், அமைக்கப்படும் தண்டவாளங்களும் அதிவேகமாக ரயிலை இயக்குவதற்கு ஏற்ப இல்லை. எனவே, ரஷிய தொழில்நுட்ப உதவியுடன் ரயில் பெட்டிகளும், தண்டவாளங்களும் அமைக்கப்படவுள்ளன. இது தொடர்பான திட்ட அறிக்கையும் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்த ரயிலை இயக்குவதற்கு முன்பு ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளையும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த வேண்டியுள்ளது.
    அதிவேக ரயில் தண்டவாளங்களின் குறுக்கே விலங்குகளும், மனிதர்களும் வந்துவிடாதபடி தடுக்க பாதையின் இரு பகுதியிலும் முழுமையாக கம்பி வேலி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    மேலும், இந்த ரயில் செல்லும்போது அதிக ஓசை ஏற்படுத்தும். மக்கள் வசிக்கும் பகுதியை ரயில் கடக்கும்போது அதிக சப்தம் ஏற்படாமல் இருக்க ஒலி தடுப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ரஷிய ரயில்வே பரிந்துரை அளித்துள்ளது. இத்திட்டத்துக்கான செலவுகளை இந்தியாவும், ரஷியாவும் சமமாகப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றன.
    இந்தியாவில் இப்போதைய அதிவேக ரயில் கதிமான் எக்ஸ்பிரஸாகும். இந்த ரயில் ஒரு மணி நேரத்தில் 160 கி.மீ. தொலைவைக் கடக்கும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad