Header Ads

  • BREAKING



    ஜன.27-இல் பெங்களூரு பல்கலை. பட்டமளிப்பு விழா.

    பெங்களூரு பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஜன.27-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
    இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 52-ஆவது பட்டமளிப்பு விழா, பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள ஞானஜோதி அரங்கத்தில் ஜன.27-ஆம் தேதிகாலை 11 மணிக்கு நடக்கவிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திம்மேகெüடா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான வஜுபாய்வாலா கலந்து கொண்டு முதுநிலைப் பட்ட தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்குகிறார்.
    விழாவில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார பேரவை இயக்குநர் டாக்டர் டி.பி.சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad