Header Ads

  • BREAKING



    காப்பீட்டு சிறப்பு சிகிச்சைக்கான தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.

    முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சைக்கான தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சைக்கான காப்பீட்டுத்தொகை ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ஏற்கனவே இந்தத் திட்டத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளுடன் மேலும் 312 சிகிச்சைகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

    இதேபோல் இந்தத் திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.1,270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad