Header Ads

  • BREAKING



    ஸ்ரீதர் தனபால் மகளின் ரூ.30 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்.

    தமிழகத்தின் தாவூத் இப்ராஹிம் என வர்ணிக்கப்படும் காஞ்சிபுரத்தை சேர்ந்த தாதா, ஸ்ரீதர் தனபாலின் மகள் பெயரில் இருந்த 30 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இன்று முடக்கியுள்ளனர்.
    ஸ்ரீதர் தனபாலின் மகள் தனலட்சுமி பெயரில், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே 30 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது. இது, அப்பகுதியில் குடியிருந்து வந்த மண்பாண்ட கலைஞர்களை மிரட்டி, 10 கோடி ரூபாய் விலைக்கு ஸ்ரீதர் தனபாலால் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சொத்துகளை தற்போது போத்தீஸ் நிறுவனத்துக்கு விற்கும் முயற்சியில் ஸ்ரீதர் தனபாலின் மகள் இறங்கினார். இதற்காக பத்திர பதிவு அலுவலகம் சென்றபோது, அங்கிருந்த அதிகாரிகள் இது குறித்து அமலாக்கப் பிரிவினருக்கு தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் விரைந்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், தனலட்சுமி பெயரில் இருந்த 30 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்குவதாக அறிவித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேட்டில் ஒரு இடத்திலும், சென்னையில் 8 இடங்களிலும் ஸ்ரீதர் தனபாலின் மனைவி பெயரில் சொத்துகள் இருப்பதாக கூறியுள்ள அமலாக்கப் பிரிவினர், அவற்றையும் முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad