Header Ads

  • BREAKING



    மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.2,000 நோட்டும் செல்லாது என அறிவிக்க வாய்ப்பு : ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தகவல்.

    மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.2,000 புதிய நோட்டு செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளன என்று அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ தெரிவித்தார். திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கழகம் சார்பில் வயல் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. வெற்றிநிலவன் தலைமை வகித்தார். அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ பேசியதாவது: பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பணம் மதிப்பு குறைப்பு நடவடிக்கையால் சாதாரண மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் வங்கிகள் மட்டுமே மத்திய அரசின் நடவடிக்கையால் பயனடைகின்றன. 

    பாஸ்டன் என்ற ஆலோசனை வழங்கும் தனியார் நிறுவனம் அறிக்கைப்படி இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பணமதிப்பு குறைப்பு நடவடிக்கை பெரும்பாலான பணக்காரர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கூறியதுபோல் இதில் எந்த ரகசியமும், கட்டுப்பாடும் இல்லை. 25 சதவீதம் சிறு தொழில் முனைவோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். தவறான கொள்கையை புரியாமல் மத்திய அரசு செயல்படுத்தி சிக்கி தவிக்கிறது. கிரடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் 

    48 பைசாவை அமெரிக்காவை சேர்ந்த விசா போன்ற 3  நிறுவனங்களுக்கு வங்கிகள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும்போது எவ்வளவு காலம் தான் சர்வீஸ் சார்ஜ் இல்லாமல் செயல்படுத்துவர். எனவே 5 மாதத்தில் கார்டு பண பரிவர்த்தனைக்கு சர்வீஸ் சார்ஜ்களை வங்கிகள் பிடிக்கும். பண மதிப்பு குறைப்பு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து மத்திய பாதுகாப்பு தொழிற்துறை சங்கங்கள் நாடு முழுவதும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம், 31ம் தேதி மனித சங்கிலி நடத்த திட்டமிட்டுள்ளன. மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.2,000 புதிய நோட்டு செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கியின் சுயாட்சி தன்மை முழுமையாக போய்விட்டது என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad