மெரினா கடற்கரையில் போராட்டம் தொடர்கிறது... சுமார் 500 பேர் பங்கேற்று வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் இன்னும் போராட்டம் தொடர்கிறது... ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு காவல்துறையின் தடியடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும், காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தும் சுமார் 500 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மெரினாவுக்குள் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மெரினா சாலைகள் முழுவதும் காவல்துரையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது, போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர் மீனவர்களால் படகுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை