தமிழக மீனவர்கள் 51 பேரை விடுவிக்க இலங்கை அரசு முடிவு.
இலங்கை சிறைகளில் உள்ள 51 தமிழக மீனவர்கள் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர் பிரச்னை தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் சார்பில் அமைச்சர் ராதாமோகன் சிங்கும், இலங்கை சார்பில் மஹிந்த அமரவீரவும் கலந்து கொண்டனர். இரு நாடுகள் பிடியில் உள்ள மீனவர்களை விரைவில் விடுவிக்க வசதியாக நிலையான நடைமுறை ஒன்றை உருவாக்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.
கருத்துகள் இல்லை