Header Ads

  • BREAKING



    இலங்கை சிறையிலிருந்த 51 தமிழக மீன்வர்கள் விடுதலை, இன்று மாலை காரைக்கால் வருகை!

    இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 51 பேர் இன்று மாலை காரைக்கால் வந்தடைகின்றனர். பின்னர் அங்கிருந்து மீனவர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 51 பேரை அந்நாட்டு நீதிமன்றங்கள் விடுதலை செய்தது.

    இந்த நிலையில், 51 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில்  ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, இலங்கை கடற்படையினரிடம் 51 பேரையும் இன்று ஒப்படைத்தது இந்தியத் துணை தூதரகம். இதைத் தொடர்ந்து, பிற்பகலில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படும் மீனவர்கள் இன்று மாலை காரைக்கால் வந்தடைகிறார்கள்.

    இதே போல் சென்னை சிறையில் இருந்த இலங்கை மீனவர்கள் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad