மதுரையில் போலீஸ் தடியடி.. 5 நாட்களுக்கு பின்பு கோவை - நாகர்கோவில் ரயில் மீட்பு.
மதுரையில் சிறைபிடிக்கப்பட்ட ரயிலை 5 நாட்களுக்கு பின்பு போலீசார் மீட்டனர்.
மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை அடித்து மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து 5 நாட்களாக சிறைபிடிக்கப்பட்டிருந்த ரயில் மீட்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக செல்லூரில் ரயிலை மறித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். செல்லூரில் தண்டவாளத்தில் அமர்ந்த மாணவர்கள் கோவையில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்கள் போராட்டத்தால் கடந்த 5 நாட்களாக, வைகை பாலத்தில் ரயில் சிறைபிடித்து வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை