Header Ads

  • BREAKING



    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மார்ச் மாதம் 5ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரியான நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிப்பாளர் சங்க நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் மாதம் 5-ஆம் தேதி நடைபெறுமென கூறப்பட்டுள்ளது. தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 கவுரவச் செயலாளர்கள், கவுரவப் பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுமென குறிப்பிடப்பட்டு உள்ளது. வருகிற 27-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 3-ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் வழங்கப்படும் என்றும் வரும் 30-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனை பிப்ரவரி 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என்றும், பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம் என்றும், பிப்ரவரி 8-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறுமென்றும், மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad