பலத்த பாதுகாப்புடன் இந்தியாவின் 68வது குடியரசு தினக் கொண்டாட்டம்.
புது தில்லி: இந்தியாவின் 68வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன், அபு தாபி இளவரசர் மொகம்மது பின் சயீத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நாட்டின் படைப்பலத்தை விளக்கும் வகையில் முப்படைகளில் அணிவகுப்பு மரியாதையும், பல்வேறு மாநிலங்களில் கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளும், ராஜ்பாத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவை அலங்கரித்தன.
மிக்-17 ரக ஹெலிகாப்டர்கள் முவர்ண தேசியக் கொடியை தாங்கி பறந்தன.
மேலும் ராணுவ, விமான, கப்பற்படையைக் குறிக்கும் வகையில் 3 ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவியபடி பறந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
கருத்துகள் இல்லை