Header Ads

  • BREAKING



    குவைத்தில்: அரச குடும்பத்தவர் உள்பட 7 பேருக்கு தூக்கு.

    குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 7 பேர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டனர்.
    மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தூக்கிலிடப்பட்ட அனைவரும், திட்டமிட்டு கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்று குவைத் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
    கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த நாட்டில் மரண தண்டனைக் கைதிகள் தூக்கிலிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
    இதுகுறித்து குவைத் அரசுக்குச் சொந்தமான "குனா' செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:
    கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பெண்கள் உள்பட 7 பேர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டனர்.
    தூக்கிலிடப்பட்டவர்களில் 2 பேர் குவைத் நாட்டவர். மேலும், எகிப்தைச் சேர்ந்த இருவர், வங்கதேசம், பிலிப்பின்ஸ், எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டவர்களில் அடங்குவர் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad