Header Ads

  • BREAKING



    சென்னையில் நேற்று ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 76 பேர் கைது.

    சென்னையில் நடைபெற்ற வன்முறைகளில் 104 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும், 57 போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும் சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. வடபழனி, எம்.எம்.டி.ஏ., எம்.கே.பி. நகர், திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் வன்முறை அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கத்தில் இணை ஆணையரின் வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும், 4 தீயணைப்பு வாகனங்கள் கொளுத்தப்பட்டதாகவும் சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. வன்முறை தொடர்பாக 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் எம்.கே.பி. நகரில் மட்டும் 28 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வடபழனி நூறடி சாலையில் காவல் ஆய்வாளர் ஒருவரின் வாகனமும், டாஸ்மாக் கடை ஒன்றுக்கும் தீவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் 97 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சென்னை பெருநகர காவல்துறை, வன்முறையாளர்கள் உள்பட 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad