Header Ads

  • BREAKING



    விரைவில் வருகிறது நோக்கியா 8 சுப்ரீம்.

    நோக்கியா நிறுவனம் நோக்கியா 6 எனும் புதிய ஆன்டிராய்டு மாடலை அடுத்த மாதம் வெளியிடபோவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் நோக்கியா 8 சுப்ரீம் எனும் மற்றுமொரு மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நோக்கியா 8 சுப்ரீம் மாடலின் சிறப்பம்சங்கள்

    * நோக்கியா 8 சுப்ரீம் 5.7 அங்குலம் மற்றும் 2560 x 1440 பிக்சல் ரெசொல்யூஷன் திறன் கொண்ட முழு எச்டி திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    *ஆன்ட்ராய்டு 7.0 நௌவ்கட், குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராசசர் இயங்கு தலத்தில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    * 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம் சேமிப்பு திறனுடன் வெளிவரவுள்ளது.

    * OIS மற்றும் Super EIS தொழில்நுட்பத்தினைக் கொண்ட இரு பிரதான கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    * ஆட்டோ ஃபோகஸ் மற்றும் இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட 24 மெகாபிக்சல்கள் பின்புற கேமிராவும், 12 மெகாபிக்சல்கள் முன்புற கேமிராவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    * நோக்கியா 8 சுப்ரீம் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad