Header Ads

  • BREAKING



    ரெட் பஸ் டிக்கெட்டுகள் செல்லாது.. ஆம்னி பேருந்து சங்கம் அறிவிப்பு.

    டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் இணையதளமான ரெட் பஸ் மூலம் பதிவு செய்த டிக்கெட்டுகள் செல்லாது என்று ஆம்னி பேருந்துகள் சங்கம் அறிவித்துள்ளது.

    ஜனவரி 12 முதல் 17 வரையிலான தேதிகளில் பல்வேறு தனியார் பேருந்துகளில் பயணிக்க ரெட்பஸ் இணையதளம் மூலம் பதிவு செய்த டிக்கெட்டுகள் செல்லாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், பயணிகள் குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளவும், ரெட் பஸ் இணையதளம் மூலம் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை ரத்து செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. ஒப்பந்தத்தை மீறி ரெட் பஸ் நிறுவனம் டிக்கெட்டுகளை அதிகவிலைக்கு விற்பனை செய்ததால் இந்த நடவடிக்கை எடுத்ததாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், தங்களது இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் பயணிக்க முடியும் என்று ரெட் பஸ் இணையதளம் தரப்பில் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad