Header Ads

  • BREAKING



    போராட்டக்காரர்கள் மீது தடியடி: சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு.

    ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.

    வழக்கறிஞர் சங்கர சுப்பு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி முறையிட்டிருந்தார்.

    இதை மனுவை விசாரிக்க தலைமை நீதிபதிகள் அமர்வு விசாரிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, தனி நீதிபதி மகாதேவன் இந்த வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த மனு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad