Header Ads

  • BREAKING



    பிரதமர் மோடியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு.

    பிரதமர் மோடியை, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தில்லியில் சந்தித்துப் பேசினார்.

    ஜல்லிக்கட்டுக்கான தடையை விலக்க வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக நல அமைப்புகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்த நிலையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தில்லியில் பிரதமரை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்களது போராட்டங்களைக் கைவிட வேண்டுமென தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து அவர் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்றிரவு தில்லி சென்றார். முதல்வருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதன்மை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் சென்றனர். இந்நிலையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை தில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள வீட்டில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad