Header Ads

  • BREAKING



    வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமீன்.

    எஸ்ஆர்எம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி, வேந்தர் மூவிஸ் மதன், பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனை கைது செய்தனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதன், தம்மீது இதுவரை போலிசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்பதைக் காரணம் காட்டி தமக்கு ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயார் எனவும் மனுவில் கூறியிருந்தார்.
    சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பிரகாஷ் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்ற எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்து, 75 கோடி ரூபாய் ஜாமீன் உத்தரவாதத் தொகை செலுத்தியுள்ளதாகவும், இந்த வழக்கில் ஜாமீன் அளிக்க 10 கோடி ரூபாய் உத்தரவாத பிணைத் தொகையை மதன் செலுத்த வேண்டும் என நீதிபதி கூறினார். மேலும், மறு உத்தரவு வரும்வரை ஒவ்வொரு திங்கட் கிழமையும் காலை பத்தரை மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 10 கோடி ரூபாய் பிணைத் தொகை அதிகளவில் உள்ளதாகவும், இதைக் குறைக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதன் தரப்பினர் மனுத்தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad