ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரியும் விவகாரம்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகிய விவகாரத்தில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அந்நாட்டு அரசுக்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு பிரிட்டன் அறிவித்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முதலில் சட்டம் இயற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை விலகுவதற்கான பணிகளை தொடங்க கூடாது என்றும் உத்தரவிட்டார். இதனால் அரசின் நடவடிக்கையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கான பணிகளில் பிரதமர் அலுவலகம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கருத்துகள் இல்லை