Header Ads

  • BREAKING



    கன்னியும் காளையும் வாழ வழி செய்வோம்’: த்ரிஷா மீதான விமர்சனம் குறித்து கமல் கருத்து.

    நடிகை த்ரிஷா மீதான விமர்சனம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், த்ரிஷாவுக்கும் நமக்குள்ள வேற்றுமையை ஊரறியட்டும். கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம்.தர்க்கம் தொடர்க நோக்கத்துடன் என கமல் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    பீட்டா அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நடிகை த்ரிஷாவுக்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் எதிர்ப்பால் காரைக்குடி அருகே நேமத்தான்பட்டியில் த்ரிஷா நடித்து வந்த படப்பிடிப்பு ரத்தானது. அவர் மரணமடைந்துவிட்டதாக சித்தரித்து சமூக வலைதளங்களில் இரங்கல் படம் வெளியானது. இந்த சம்பவத்துக்கு த்ரிஷாவும் ட்விட்டரில் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad