Header Ads

  • BREAKING



    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் பதவியேற்பு.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் அண்மையில் பரிந்துரைக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர், இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    உச்ச நீதிமன்றத்தில் பொறுப்பேற்கும் 44 ஆவது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் ஆவார். இவர், 2017 ஆகஸ்ட் 27ம் தேதி வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிவகிக்க இருக்கிறார்.

    ஜே.எஸ்.கெஹர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முதல் சீக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad