ரயில்வே சலுகைகளைப் பெற கட்டாயமாகிறது ஆதார்.
ரயில்வேத் துறை அளிக்கும் சலுகைகளைப் பெற ஆதார் எண்ணைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் உரையில் வெளியிடுவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 92 ஆண்டுகளாக இருந்த மரபை மாற்றி முதன்முறையாக மத்திய பட்ஜெட்டுடன் இணைந்த ரயில்வே பட்ஜெட் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ரயில்வேத் துறையில் அளிக்கப்படும் சலுகைகள் சரியான பயனாளிகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் ரயில்வேத்துறை அளித்துவரும் சலுகைகளாக் கடந்த 2015-16ம் ஆண்டில் அரசுக்கு ரூ.1600 கோடி செலவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை