அமெரிக்க அதிபராக ஒபாமாவின் கடைசி உரை....!
அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விடைபெற இருக்கும் ஒபாமா, அதிபராக நாட்டு மக்களுக்கு கடைசி உரை நிகழ்த்தினார்.
சிகாகோவில் உரையாற்றிய ஒபாமா, அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த தீவிரவாத சக்திகள் பலவும் முறியடிப்பட்டிருப்பதாகவும், 8 ஆண்டுகளில் அமெரிக்காவில் எந்த பயங்கரவாத தாக்குதலும் நடைபெறவில்லை எனவும் கூறினார். 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அமெரிக்கா வலுவான நாடாக மாறியுள்ளது என கூறிய ஒபாமா, இதற்கு காரணமாக இருந்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்கும் போது நிர்வாக ரீதியாக எந்த பிரச்னையும் இருக்காது எனவும் ஒபாமா குறிப்பிட்டார். அமெரிக்கர்கள் கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இனவாதமும், சமத்துவமின்மையும் நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்தவதாக எச்சரித்த ஒபாமா, அமெரிக்கர்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். முன்னதாக ஒபாமா மேலும் 4 ஆண்டுகள் அதிபராக நீடிக்க வேண்டும் என ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். எனினும் ஒபாமா அதனை மறுத்துவிட்டார்.
கருத்துகள் இல்லை