Header Ads

  • BREAKING



    புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவக்கம்! ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறும்.

    புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை துவங்குகிறது. வறட்சி மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்ற காங்., ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. 29ம் தேதி தனது முதல் பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி சமர்ப்பித்தார். செப்டம்பர் மாதம் 9ம் தேதி வரை 12 நாட்கள் சட்டசபை நிகழ்ச்சிகள் நடந்தன.நடப்பாண்டிற்கான முதல் சட்டசபை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் வெளியிட்டிருந்தார். முதல் கூட்டம் என்பதால் சட்டசபையில் உரை நிகழ்த்த கவர்னர் கிரண்பேடி விருப்பம் தெரிவித்து அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.ஆனால், இதுவரை அரசு சார்பில் கவர்னர் உரை தயாரிக்கப்படவில்லை.

    கவர்னர் உரைக்கு அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்படவில்லை. எனவே, இன்றைய கூட்டத்தில் கவர்னர் உரை இடம் பெற வாய்ப்பில்லை.இன்று காலை 11.00 மணிக்கு கூடும் சட்டசபை கூட்டத்தில் தமிழக முதல்-வர் ஜெயலலிதா, முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, புதுச்சேரி முன்னாள் துணை சபாநாயகர் ஏ.வி. ஸ்ரீதரன், முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை ஒத்தி வைக்கப்படும்.நாளை (25ம் தேதி) காலை சட்டசபை மீண்டும் கூடுகிறது.

    புதுச்சேரி மற்றும் காரைக்காலை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்பது தொடர்பான விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.அதேபோல் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை பாராளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் காளைகளை காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதையடுத்து சட்டசபை கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படும்.மறைந்த தலைவர்களுக்கு இன்றைய கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்படும் என்பதால் என்.ஆர்.காங்., அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து எம்.எல். ஏ.,க்களும் பங்கேற்க உள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad