ஆந்திராவில் எதிரொலிக்கும் மெரினா போராட்டம்.
மெரினாவைப் போல ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்புச் அந்தஸ்து வேண்டும் என்பது போராட்டகாரர்களின் கோரிக்கையாக உள்ளது. விசாகப்பட்டினத்தில் ராமகிருஷ்ணா மிஷன் கடற்கரையில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட இளைஞர்கள் முயன்றனர். ஆனால், அவர்களை ஆந்திர காவல்துறையினர் உடனடியாக கைது செய்துவிட்டனர். போராட்டத்திற்காக, மாணவர்கள், இளைஞர்களை கடற்கரைக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோரை ஆந்திர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டினம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை