Header Ads

  • BREAKING



    குடியரசு தின அணிவகுப்பு: தமிழக அலங்கார ஊர்தியில் இடம்பெறத் தவறியது ஜல்லிக்கட்டு.

    புது தில்லி: நாட்டின் தலைநகர் புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், கரகாட்டம், நாதஸ்வர கச்சேரியுடன் சென்ற தமிழக அலங்கார ஊர்தி பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

    எனினும், நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நினைவூட்டும் வகையில், தமிழக அலங்கார ஊர்தியில் ஜல்லிக்கட்டுக் காளை இடம்பெறும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது இடம்பெறாதது பல தமிழர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது.

    புது தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், பல்வேறு மாநிலங்களின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பது வழக்கம்.

    அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழகத்தின் அலங்கார ஊர்தியில், கரகாட்டக் கலைஞர்கள் நடனமாடியபடியும் நாதஸ்வர கலைஞர்கள் இசைத்தபடியும் சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad