Header Ads

  • BREAKING



    சென்னை பல்கலை. முதுநிலை படிப்பு தேர்வு முடிவுகள்: ஞாயிற்றுக்கிழமை வெளியீடு.

    சென்னைப் பல்கலைக்கழக முதுநிலை பட்டப் படிப்புகள், தொழில் படிப்புகளுக்கான 2016 நவம்பர் மாதத் தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு முடிவுகளை www.results.unom.ac.in, www.ideunom.ac.in, http:egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிப்வர்கள் தாள் ஒன்றுக்கு ரூ. 1000 கட்டணத்தை -பதிவாளர், சென்னைப் பல்கலைக்கழகம்- என்ற பெயருக்கு வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad