Header Ads

  • BREAKING



    தனுஷின் வட சென்னை படப்பிடிப்பு எப்போது..?

    தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வட சென்னை படத்தின் இரண்டாம் கட்ட படிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனரான வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுற்றது.

    இதை தொடர்ந்து, தனுஷ் விஐபி 2 என பல படங்களில் புதிதாக ஒப்பந்தமாக வட சென்னை படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்தது.
    இந்நிலையில், வடசென்னை படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என வெற்றிமாறன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துதுள்ளார்.

    தனுஷ், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாவதால் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் வட சென்னை விரைவில் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad