வழக்குரைஞர் சேவை வரி விதிப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு: உச்ச நீதிமன்றம் ஏற்பு.
வழக்குரைஞர்களின் சேவைக்கு வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
மேலும், இதுதொடர்பாக வெவ்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்களையும் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு மாற்றுவதற்கும் நீதிபதிகள் குரியன் ஜோசப், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
வழக்குரைஞர்கள், தாங்கள் வழங்கும் ஆலோசனைக்காக, தங்களது கட்சிக்காரர்களிடம் இருந்து பெறும் தொகைக்கு சேவை வரி விதிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லி உயர் நீதிமன்றம் உள்பட பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் சங்கங்கள் மனுக்களை தாக்கல் செய்தன.
கருத்துகள் இல்லை