Header Ads

  • BREAKING



    மணல் வாங்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய என்ன சிரமம்? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி.

    மணல் வாங்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய என்ன சிரமம் என தமிழக பொதுப்பணித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    மணலுக்கான விலையை ஸ்வைப்பிங் மிஷின் மூலம் பெற உத்தரவிடக்கோரி லாரி உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், பணமதிப்பிழப்பால் குவாரிகளில் ரொக்கமாக கொடுத்து மணல் வாங்க சிரமமாக இருப்பதாக புகார் கூறியிருந்தனர்.

    இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணல் வாங்க இணையதளத்தில் முன்பதிவு செய்யவும், பணத்தை கார்டுகள் மூலம் பெறவும் என்ன சிரமம் என தமிழக பொதுப்பணித்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், இணையதள புக்கிங், ஸ்வைப் மிஷின் பயன்பாடு பற்றி 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad