Header Ads

  • BREAKING



    பதுக்கி வைக்கப்பட்டிருந்த பருப்பு வகைகள் சந்தைக்கு வந்ததால் விலை வீழ்ச்சி.

    மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும், மியான்மர் மற்றும் மலேசியாவில் இருந்தும் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்பு, விருதுநகர் வணிகச் சந்தை வழியாக தமிழகம், கேரளா ஆந்திராவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு துவரம்பருப்பு பயிர் செய்யும் இடங்களில் அதிக விளைச்சல் என்பதால், வரத்தும் கனிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு காரணமாக, இதுநாள்வரை துவரம்பருப்பை பதுக்கி வைத்திருந்த மொத்த வியாபாரிகள், அவற்றை சந்தைக்கு அனுப்பி வைத்துள்ளதால், தேவைக்கு அதிகமாகவே துவரம் பருப்பு வந்துள்ளது. இதனால், கடந்த மாதம் கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முதல்தர துவரம்பருப்பு, தற்போது 84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை, மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
    இதேபோல், கடந்த மாதம் கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட உளுத்தம்பருப்பு, தற்போது 104 ரூபாய்க்கும், கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பாசிப் பருப்பு, 68 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முந்தையை விலைப் பட்டியலை ஒப்பிடும்போது, பருப்புகளின் விலை, கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது. ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாகவும், இன்னும் மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாறாத கடை வியாபாரிகள், கொள்முதல் அளவை குறைத்துக்கொண்டதாலும், மொத்த வியாபாரிகளிடம் பருப்பு தேக்கமடைந்துள்ளதால், இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பதுக்கல்காரர்களின் சூழ்ச்சியால், ஒரு கிலோ துவரம்பருப்பு, 210 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad