சென்னை வன்முறை தொடர்பாக கைது நடவடிக்கை தொடரும் – சேஷஷாயி.
சென்னையில் பேசிய அவர், சென்னை வன்முறையில் காயம் அடைந்த காவலர்களுக்கு தலா ர10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றார். நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தாக்குதல் நடத்தியதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று சேஷஷாயி தெரிவித்தார். காவல்துறை வாகனங்களை எப்படி காவல்துறையினரே கொளுத்துவார்கள் என்று வினவிய அவர், காவல்துறையினர் தங்களை தாங்களே எப்படி தாக்கிக் கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். காவல்துறையில் ஒருசிலர் தவறு செய்ததால் காவல்துறையே தவறு செய்துவிட்டதாக கூற முடியாது என்றும் சேஷஷாயி கூறினார். வன்முறையில் ஈடுபட்ட மேலும் 100 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய சேஷஷாயி,
வன்முறையாளர்களுக்கு உதவியவர்களும் கைது செய்யபடுவர் என்று தெரிவித்தார். ஐஸ் ஹௌஸ் காவல் நிலையத்திற்கு தீ வைத்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை