ஜல்லிக்கட்டு குறித்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு.
ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் மத்திய அமைச்சர் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்த முடியாத ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த ஆண்டு நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சர் அனில் மாதவ் தவே, விலங்குகள் வதைத் தடைச்சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட உள்ளார். அப்போது ஜல்லிக்கட்டு தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து அவர் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மத்திய அமைச்சரின் முக்கிய அறிவிப்பை நோக்கி தமிழக மக்கள் காத்திருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை