Header Ads

  • BREAKING



    சிபிஐயின் புதிய இயக்குநராக அலோக் குமார் வர்மா நியமனம்.

    தில்லி காவல் துறை ஆணையர் அலோக் குமார் வர்மா, மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) புதிய இயக்குநராக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.
    பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கொண்ட மூவர் குழு, அலோக் குமார் வர்மாவை தேர்வு செய்தது.
    சிபிஐயின் இயக்குநராக இருந்த அனில் சின்ஹா, கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி ஓய்வுபெற்றதை அடுத்து, கடந்த இரு மாதங்களாக அந்தப் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. அதையடுத்து, அந்தப் பதவிக்கு இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் இயக்குநர் கிருஷ்ண செளதரி, மகாராஷ்டிர காவல் துறை டிஜிபி எஸ்.சி.மாத்தூர் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. 
     இந்த நிலையில், சிபிஐயின் புதிய இயக்குநரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம், தில்லியில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிபிஐயில் எந்தப் பதவியையும் வகிக்காத அலோக் குமார் வர்மாவை, அதன் இயக்குநராக நியமிப்பதற்கு மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பின்னர், அலோக் குமார் வர்மாவையே பிரதமர் மோடி தலைமையிலான மூவர் குழு தேர்வு செய்தது.
    59 வயதாகும் அலோக் குமார் வர்மா, சிபிஐ இயக்குநராக 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். 1979-ஆம் ஆண்டு ஐபிஎஸ் முடித்த அவர், தில்லி காவல் துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இதுதவிர, அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, மிúஸாரம் ஆகிய மாநிலங்களில் உளவுத் துறையில் (ஐ.பி.) பணியாற்றியுள்ளார்.
    தில்லி காவல் துறை ஆணையராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ஆம் தேதி பொறுப்பேற்கும் முன், தில்லி திஹார் சிறையின் இயக்குநராக பதவி வகித்தார்.
    இந்நிலையில், சிஐபியின் 27-ஆவது இயக்குநராக அலோக் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad