Header Ads

  • BREAKING



    வாடிவாசல் திறக்கும்வரை வீட்டு வாசலுக்கு செல்ல மாட்டோம்.

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி அலங்காநல்லூரில் தொடர்ந்து 3 ஆவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. வாடிவாசல் திறக்கும் வரை வீட்டு வாசலுக்கு செல்ல மாட்டோம் என்று அவர்கள் சூளுரைக்கின்றனர்.

    வாடிவாசல் திறந்தால்தான் வீட்டுவாசல் செல்வோம்’ வெளியூரில் இருந்து ஒன்றிணைந்து மதுரை அல‌ங்காநல்லூருக்கு திரண்டு வந்த இளைஞர்கள் கூட்டம் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்‌தி போராட்டத்தி‌‌ல் இற‌ங்கினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்யவே உள்ளூர் மக்களும் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர்.

    ஜல்லிக்கட்டுக்காக வெளியூர் இளைஞர்கள் இங்குவந்து போராடும் போது, சொந்த ஊர்காரர்கள் ஏன் போராடக் கூடாது என்ற கேள்வியால் உந்தப்பட்டு தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் வீதியில் திரண்டுள்ளனர். இதனால் வாட்டும் குளிரையும் பொறுப்படுதாமல் இரவு முழுவதும் வீதியில் மன்றாடினர்.

    போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர். இருப்பினரும் அதில் 50 பேர் மண்டபம் ஒன்றில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்துபவர்களை காவல்துறையினர் மிரட்டுவதாக குற்றம்சாட்டும் இந்த மக்கள், என்ன நடந்தாலும் தீர்வு கிடைக்கும் வரை ‌ஓயப்போ‌வதில்லை என்‌று முழக்கமிடுகின்றனர்‌ இம்மக்கள்.

    அலங்காநல்லூரில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள், ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதுவரை போராட்டம் தொடரும் என்று உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad