Header Ads

  • BREAKING



    தேவாலய நீதிமன்றங்கள் அளிக்கும் விவாகரத்து செல்லாது: உச்ச நீதிமன்றம்.

    கிறிஸ்தவ தேவாலய நீதிமன்றங்கள் அளிக்கும் விவாகரத்து சட்டப்படி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
    கிறிஸ்தவ தனிநபர் சட்டத்தின்கீழ் தேவாலய நீதிமன்றங்கள் அளிக்கும் விவாகரத்துகள் சட்டப்படி செல்லும் என்று அறிவிக்கக்கோரி கர்நாடக கத்தோலிக கிறிஸ்தவ சங்க முன்னாள் தலைவர் கிளாரன்ஸ் பைஸ் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார்.
    அதில், முஸ்லிம்கள் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து பெறுவதை சட்டம் ஏற்றுக்கொள்வதுபோல, கிறிஸ்தவ தேவாலயங்களில் அளிக்கப்படும் விவாகரத்துக்களையும் சட்டப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
    இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: 
    கிறிஸ்தவ தேவாலயங்கள் அளிக்கும் விவாகரத்துக்கள் சட்டப்படி செல்லாது. எனவே, இவ்வாறு அளிக்கப்பட்ட விவாகரத்துக்களை ஏற்க வலியுறுத்தும் மனுவை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad