சுமை தூக்கும் தொழிலாளர்கள், சரக்கு லாரி ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம்.
ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டால், ஒரு மாத காலமாக ஒப்பந்ததாரர்கள் சம்பளம் வழங்காததைக் கண்டித்து, திருப்பூர் ரயில் நிலைய கூட்ஷெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் சரக்கு லாரி ஓட்டுனர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் ரயில் நிலைய கூட் ஷெட்டில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் சரக்குலாரி ஓட்டுனர்களுக்கு, ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டால் கடந்த ஒரு மாத காலமாக ஒப்பந்ததாரர்கள் சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. வங்கியில் கணக்கு துவங்கினால்தான் சம்பளம் என ஒப்பந்ததாரர்கள் கூறியதாகவும், அவ்வாறு கணக்கு துவங்கியும் சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் சரக்கு லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை