டிரெண்டாகும் தோழர் எனும் வார்த்தை: சைலேந்திரபாபு விளக்கம்.
தோழர்.. தோழர் என்று எங்கு திரும்பினாலும் சமூக வலைத்தளங்கில் டிரெண்டாகி வரும் நிலையில், தோழர் என்கிற வார்த்தை தொடர்பாக தான் எந்தவித கருத்தும் கூறவில்லை என ஏடிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.
நேற்றிலிருந்தே வாங்க தோழர். போங்க தோழர்.. என்றபடி தோழர் என்கிற வார்த்தை சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. மேலும் ஒரு சிலர் ‘தோழர்’ என்றே தங்களது டி.பி.க்களையும் வாட்ஸ் அப்பில் மாற்றி வருகின்றனர். இரவு வணக்கம் தோழர் காலை வணக்கம் தோழர் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது தோழர் என்ற வார்த்தை.
தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அவர்கள், யாரேனும் தங்களுக்கு தோழர் எனக் கூறிக்கொண்டு குறுஞ்செய்திகள் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அனுப்பினால் அதனை சற்றும் பொருட்படுத்தாமல் உடனடியாக அழித்து விடுங்கள் எனச் சொன்னதாக ஒரு தகவல் பரவியது. இதனையடுத்து பலரும் தோழர் என்கிற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்த அவ்வார்த்தை டிரெண்டாக மாறியது.
இந்நிலையில் சைலேந்திர பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளர். அதில், இது ஒரு பொய்யான செய்தி எனவும், தோழர் என்ற வார்த்தையில் தான் எந்த கருத்தும் கூறவில்லை என கூறியுள்ளார். தமிழ்வழி கல்வி பயின்ற தனக்கு அந்த வார்த்தையின் பொருள் தெரியும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை