ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு சட்டம் கொண்டு வரலாம்.
புதுடில்லி: ''ஜல்லிக்கட்டை பாரம்பரிய விளையாட்டாக கருதி, அதை நடத்த, தமிழக அரசுசட்டம் கொண்டு வரலாம்,'' என, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், முகுல் ரோஹத்கி கூறினார்.டில்லியில், அவர் கூறியதாவது: மாநில அரசின்அதிகாரத்துக்குட்பட்டது தான் விளையாட்டு. இதில் மத்திய அரசு தலையிட முடியாது. அதனால், ஜல்லிக்கட்டை பாரம்பரிய விளையாட்டாக கருதி,அதை நடத்த, தமிழக அரசுசட்டம் கொண்டு வரலாம். அதேநேரத்தில், இதுபோன்ற விளையாட்டுகளில், விலங்குகளை துன்புறுத்தும் செயல்கள் இடம் பெறக்கூடாது. விலங்குகள் நலனை கருத்தில் கொள்ளாமல், விளையாட்டை நடத்த அனுமதிக்க கூடாது.இவ்வாறு ரோஹத்கி கூறினார்.
கருத்துகள் இல்லை