டிஜிபியுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் குறித்து டிஜிபியுடன் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இளைஞர் போராட்டம் குறித்து டிஜிபியுடன் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்க வலியுறுத்தியும், அலங்காநல்லூர், வாடிப்பட்டியில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை