இடிஏ, புகாரி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை.
சென்னை: இடிஏ மற்றும் புகாரி குழுமங்களுக்கு சொந்தமான இடங்கள் உட்பட நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சுமார் 75 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனையை நடத்தினர்.
இடிஏ மற்றும் புகாரி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான 75 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது. சுமார் 750 அதிகாரிகள் சோதனைப் பணியில் ஈடுபட்டனர்.
தமிழக தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனையைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னை, ஹைதராபாத், தூத்துக்குடி, மதுரை, மும்பை, கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட நகரங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விவரங்கள் எதிர்பர்க்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை