Header Ads

  • BREAKING



    ஒபாமாவுக்கு இருந்த மவுசு ட்ரம்ப்க்கு இல்லை..!

    அமெரிக்காவின் அதிபராக கடந்த 20 ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். முன்னாள் அதிபர் ஒபாமாவின் பதவி ஏற்பு விழாவை விட டிரம்ப் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றோர் மிக குறைவாக இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்காவின் ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 20 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

    இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஒபாமாவின் பதவியேற்பு விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதாகவும் அதில் மூன்றில் ஒரு பங்கு பார்வையாளர்கள்தான் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதாகவும் வாஷிங்டன் டிசி நேஷனல் மால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.

    ஒபாமா பதவிப் பிரமாணம் செய்தது திருவிழா கோலம் போல் அரங்கேறியது எனவும் அதில் 18 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொண்டதாகவும் அமெரிக்கப் பத்திரிகை ஒன்று கூறியுள்ளது.

    மேற்கண்ட தகவல்களுக்கு வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஊடகங்கள் தவறான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad