Header Ads

  • BREAKING



    பிரதமரின் மாநிலத்திற்கும் பரவிய ஜல்லிக்கட்டு போராட்டம்..!

    பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கும் பரவியுள்ளது ஜல்லிக்கட்டுப் போராட்டம்.

    ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்திலும் ஜல்லிக்கட்டிற்கான போராட்டம் தொடங்கியுள்ளது. வதோதராவில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக, ஜல்லிக்கட்டுக்காக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் அங்கு வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டிற்கான போராட்டத்தை தொடங்கியள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad